அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் பயனர்களுக்கு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1, 2022 முதல் பயனர்கள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இந்த இரண்டு திட்டங்களும் ரூ. 250க்கும் குறைவாகவே உள்ளன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் நிறுவனம் ரூ. 228 மற்றும் ரூ. 239 என விலை நிர்ணயக்கப்படுள்ளது.
மற்ற நிறுவனங்கள் மாதத்தின் பெயரில் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் திட்டங்களை வழங்கி வரும் நிலையில், 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டங்களை BSNL வழங்கி உள்ளது…
BSNLன் ரூ.228 திட்டத்தில், தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும், ஆனால் தினசரி டேட்டா கோட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு பலன்கள் கிடைக்கும். அதாவது, எந்த நெட்வொர்க்கிலும் இலவச அழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம். BSNLன் இந்த ரூ.239 திட்டத்தில், வரம்பற்ற குரல் அழைப்புடன் ரூ.10 கூடுதல் டாக் டைம் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.228 திட்டத்தின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்..