அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் விலகிய 6,000 பேர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் சென்றிருந்தார். நெய்வேலி நகரம் சி.பி.எஸ். அண்ணா திடலில் திமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக, தமிழக வெற்றிக் கழகம் கட்சிகளில் இருந்து விலகிய சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து கொண்டனர்.
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியினர் அனைவரும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில், பாஜக ஓபிசி அணியின் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், தேமுதிக ஒன்றிய பொருளாளர் அன்பழகன், பாமக மாவட்ட துணை செயலாளர் செம்மேடு அருள்ஜோதி உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Read More : இந்தி கற்பிக்க விருப்பமா..? தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக் கணிப்பு..!! அண்ணாமலை சொன்ன யோசனை