கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012ஆம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, அந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஊழல் புகார்கள், முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள், பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல் என ஏற்கனவே இருந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 62 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தகுதியில்லை என்ற அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தகுதிக் குறைவானவர்களாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நீக்கப்பட்டு, முறையாக சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்படுவர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.