fbpx

அரபு உணவுகளை சாப்பிட்ட 68 பேர் அடுத்தடுத்து மயக்கம்..!! மருத்துவமனையில் சிகிச்சை..!! பரபரப்பு

கேரளாவில் ஒரே உணவகத்தில் சாப்பிட்ட 68 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரளா மாநிலம் ஏர்ணாகுளத்தில் மஜ்லிஸ் என்ற அரபியன் உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் அல்-ஃபஹாம் மற்றும் ஷவாய் ஆகிய இரண்டு பிரபலமான அரபு உணவுகளை அங்கு வந்தவர்கள் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 68 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் ஏர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வடபரவூர் நகராட்சி தலைவர் வி.ஏ.பிரபாவதி கூறுகையில், ”சம்பந்தப்பட்ட ஹோட்டல் மூடப்பட்டுவிட்டது. அதற்கு முன் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏர்ணாகுளத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளனர். தேர்வுக்கான கடைசி நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக அரபியன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். இதில், 68 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

அரபு உணவுகளை சாப்பிட்ட 68 பேர் அடுத்தடுத்து மயக்கம்..!! மருத்துவமனையில் சிகிச்சை..!! பரபரப்பு

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது உரிமம் இல்லாமல் செயல்படும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு துறைக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chella

Next Post

வீட்டிற்குள் புகுந்த 3 பேர்..!! கூட்டு பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் சூடு..!! பழிவாங்க இப்படி ஒரு பொய்யா..?

Wed Jan 18 , 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பை குர்லா பகுதியில் வசிக்கும் 42 வயது பெண் ஒருவர், கடந்த மாதம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர், கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து, சிகரெட்டால் தனது பிறப்புறுப்பில் சூடுவைத்ததாக தெரிவித்திருந்தார். அதோடு புகார் அளித்த பெண் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் […]

You May Like