fbpx

Election 2024: 5-ம் கட்ட தேர்தலில் 695 வேட்பாளர்கள் போட்டி…!

மக்களவைத் தேர்தல் 2024-ன் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் 8 மாநிலங்கள்/ மற்றும் யூனியன் பிரதேசங்களில் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 49 தொகுதிகளில் 1586 வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலில் மே மாதம் 20-ம் தேதி நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்காக 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் மொத்தம் 1586 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 3-ம் தேதியாகும்.

தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் பரிசீலனை செய்ததில், 749 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது. ஐந்தாம் கட்டத்தில், மகாராஷ்டிராவில் 13 மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 512 வேட்பு மனுக்களும் உத்தரப்பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளில் இருந்து 466 வேட்பு மனுக்களும் பதிவாகியுள்ளன. ஐந்தாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 14 ஆகும்.

Vignesh

Next Post

காரை ஒரமாக நிறுத்திவிட்டு ஆட்டோவில் சென்ற ஸ்ருதிஹாசன்…!

Thu May 9 , 2024
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தமிழ், தெலுங்கு மொழி மட்டுமன்றி பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் ஸ்ருதி இசை அமைத்து பாடிய இனிமேல் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது மும்பையில் தங்கியுள்ள இவர், அங்கு ஒரு பாலிவுட் படத்தில் கமிட்டாகி உள்ளார். மும்பையில் […]

You May Like