fbpx

6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை… தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு….

பீகார் , மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம்  மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 6ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகாரில் – மொகாமா , கோபால்கஞ்ச் தொகுதிகளுக்கும் ., மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, ஹரியானாவின் ஆதம்பூர் , தெலுங்கானாவின் முனுகோட் , உத்தரபிரதேசத்தின் கோலா கோக்ரநாத் மற்றும் ஒடிசாவின் தாம்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் 3ம் தேதி நடைபெறும்.

கோபால்கஞ்ச் தொகுதியில் சுபாஷ் சிங் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார் , எம்.எல்.ஏ. அனந்த்குமார் சிங் மொகாமா தொகுதியில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் , இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை சந்திக்கின்றது.

இதே போல அந்தேரி கிழக்கு , கோலா கோகர்நாத் , தாம்நகரில் எம்.எல்.ஏக்கள் காலமானதால் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இடம் காலியாக உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 14க்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மனுவை திரும்பப்பெற 17ம் தேதி கடைசிநாள். நவம்பர் 7ம் தேதிக்குள் முடிவு அறிவிக்கப்பட்டுவிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Post

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து சிறுவன் பலி

Mon Oct 3 , 2022
மஹாராஷ்டிராவில் வீட்டில் எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தபோது திடிரென பைக் பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மஹாராஷ்டிராவின் பல்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தபோது 7 வயது சிறுவன் ஷபீர் அன்சாரி என்ற சிறுவன் ஸ்கூட்டர் அருகில் நின்றிருந்தான். அன்சாரியின் பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றார். அன்சாரியின் தந்தை ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட ஸ்விட்ச் போர்டில் கனெக்ட் […]

You May Like