fbpx

என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!… இதுவரை 107 பேர் சுட்டுக்கொலை!… பாதுகாப்புப் படை அதிரடி!

Naxalites Killed: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பஸ்தார் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக மாநில காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த 7 நக்சலைட்டுகளை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் பிரபாத் குமார் கூறியதாவது, என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து இரண்டு நக்சலைட்டுகளின் உடல்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, இந்தச் சம்பவத்துடன், மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடனான தனித்தனி என்கவுன்டரில் இந்த ஆண்டு இதுவரை 107 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சில நாட்களுக்கு முன்பு, சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சுமார் 10 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். அதற்கு முன், பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore:

Kokila

Next Post

ரிமல் புயல் எதிரொலி!! தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை!

Fri May 24 , 2024
வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில், தென்மேற்கு […]

You May Like