மும்பை கிர்காவ் பகுதியில், குறிப்பிட்ட பள்ளியின் அருகே விபசார விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதா கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விபசார விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. புகாரின் பேரில், போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் அந்த பள்ளி அமைந்துள்ள வி.பி ரோடு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பள்ளியில் இருந்து 200 மீ்ட்டர் தொலைவில் விபசார விடுதிகள் செயல்பட்டு வருவது உறுதியாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கமிஷனர், 2 மாதத்திற்குள் பள்ளியின் அருகே செயல்படும் விபசார விடுதிகளை மூடுமாறு உத்தரவிட்டார். கமிஷ்னரின் உத்தரவின் பேரில், பள்ளியின் அருகே செயல்பட்டு வந்த 7 விபசார விடுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஆள்கடத்தல் பிரிவு போலீசார் இங்கு அதிரடி சோதனை நடத்தினர். சோதனை நடத்தியதில், விபசாரத்தில் தள்ளப்பட்ட 33 பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 24 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.