fbpx

நீரிழிவு, இருதயம் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை 70% வரை குறைப்பு..! மத்திய அரசு திட்டம்..!

புற்றுநோய், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற சில முக்கியமான மருந்துகளின் விலையை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் மருந்துக்காக அதிகம் செலவு செய்கின்றனர். சுகாதாரச் செலவைக் குறைப்பதன் மூலம் பல நோயாளிகளுக்கு பணரீதியாகவும் நிவாரணம் அளிக்க முடியும் என்ற நோக்குடன் அரசாங்கம் சில பரிந்துரைகளை தயாரித்துள்ளது. ஆனால், அறிவிப்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இந்நிலையில், சில முக்கிய மருந்துகளின் அதிக விலையை ஒழுங்குபடுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு, இருதயம் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை 70% வரை குறைப்பு..! மத்திய அரசு திட்டம்..!

இந்த அரசின் முன்மொழிவு நிறைவேறினால், 70% வரை விலைக் குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது. தற்போது பரவலாக புழக்கத்தில் உள்ள மருந்துகளை, தேசிய அத்தியாவசிய மருத்துவப் பட்டியலில் (NLEM) சேர்க்கவும் முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது. சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த முன்மொழிவு குறித்து விவாதிக்க மருந்துத் துறையின் பிரதிநிதிகளை ஜூலை 26ஆம் தேதி சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். தற்போது, ​​மருந்து விலைக் கட்டுப்பாட்டாளர் NPPA, NLEM இல் இருக்கும் 355 மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்துகிறது. அத்தகைய திட்டமிடப்பட்ட மருந்துகளின் வர்த்தக வரம்புகள் மொத்த விற்பனையாளர்களுக்கு 8% மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு 16% என கட்டுப்படுத்தப்படுகிறது.

நீரிழிவு, இருதயம் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை 70% வரை குறைப்பு..! மத்திய அரசு திட்டம்..!

அரசாங்கத்தின் நேரடி விலைக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மற்ற அனைத்து மருந்துகளுக்கும் விலையை நிர்ணயிக்க நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு. அத்தகைய மருந்துகளின் விலையை ஆண்டுதோறும் 10% மட்டுமே அதிகரிக்க முடியும். இத்தகைய மருந்துகளின் வர்த்தக வரம்பு மிக அதிகமாக உள்ளதோடு, நோயாளிகளை வணிக ரீதியில் பாதிக்கிறது. பிப்ரவரி 2019இல், பொதுநலன் கருதி DPCO இன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி சோதனை அடிப்படையில் 41 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் வர்த்தக வரம்புகளை 30% வரை NPPA கட்டுப்படுத்தியது. இதன் விளைவாக 526 பிராண்டுகளின் MRP இல் 90% குறைக்கப்பட்டது. மேலும், கரோனரி ஸ்டென்ட் மற்றும் முழங்கால் மருந்துகளின் விலையையும் அரசு நிர்ணயித்துள்ளது.

Chella

Next Post

விபச்சார விடுதியாக மாறிய பண்ணை வீடு..! விசாரணையில் சிக்கிய பாஜக துணைத் தலைவர்..!

Sun Jul 24 , 2022
பாஜக மாநில துணைத் தலைவர் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டை, விபச்சார விடுதியாக பயன்படுத்தி வந்தது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேகாலயா மாநில பாஜகவின் துணைத் தலைவராக இருப்பவர் பெர்னார்டு என். மராக். இவருக்கு சொந்தமாக மேற்கு கரோ என்ற மலைப்பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவ்வபோது ஆண்கள் மற்றும் இளம் பெண்களின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கட்டாயப்படுத்தி அழைத்து வருவதாகவும் அம்மாவட்ட […]
விபச்சார விடுதியாக மாறிய பண்ணை வீடு..! விசாரணையில் சிக்கிய பாஜக துணைத் தலைவர்..!

You May Like