fbpx

பெங்களூரு ஆரஞ்சு லைன் மெட்ரோ ரயில் ; குறுக்கே உள்ள 700 கட்டிடங்கள்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்த முடிவு என்ன?

பெங்களூரு நகரில் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மூன்றாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் ஆரஞ்சு லைன் வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கெம்பபுரா முதல் ஜே.பி.நகர் 4வது பேஸ் வரையிலான 32.2 கிலோமீட்டர் தூர சேவையாகும். இந்த பாதையானது அவுட்டர் ரிங் ரோடு (ORR) பகுதியில் அமைகிறது. 

இதில் தான் பெரிய சிக்கல் எழுந்துள்ளது. ஆரஞ்சு லைன் மெட்ரோ ரயில் சேவையில் மேல் வழித்தடமாக செல்லும் பகுதியில் 700 கட்டடங்கள் குறுக்கே இருக்கின்றன. இவற்றை இடித்து அகற்ற வேண்டியுள்ளது. இந்த கட்டடங்கள் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் – சில்க் போர்டு வரையிலான ப்ளூ லைன், கலெனா அக்ரஹாரா – நாகவரா வரையிலான பிங்க் லைன் ஆகியவற்றை ஒட்டி அமைந்துள்ளன.

அனைத்து கட்டடங்களையும் கையகப்படுத்துவதற்கு மட்டும் 1,900 கோடி ரூபாய் அளவிற்கு நிதி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. மொத்தம் 1.3 லட்சம் சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகிறது. இதில் வெற்று நிலங்களும், ஏராளமான கட்டடங்களும் அடங்கும். இந்நிலையில் ஆரஞ்சு லைன் மெட்ரோ வழித்தடத்தில் உள்ள கட்டடங்களை சர்வே எடுக்கும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆரஞ்சு வழித்தட திட்டத்தில் கையகப்படுத்த வேண்டிய நிலம் பல்வேறு தரப்பினரிடம் இருப்பது கால தாமதத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஏனெனில் பாதுகாப்புத் துறை, மத்திய, மாநில அரசு ஏஜென்சிகள், பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம், பெங்களூரு நகர மேம்பாட்டு ஏஜென்சி, பெங்களூரு மாநகராட்சி உள்ளிட்டவற்றுக்கு சொந்தமான கட்டடங்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றிடம் இருந்து கையகப்படுத்தும் நிலங்களில் மெட்ரோ வழித்தடங்கள் மட்டுமின்றி, ரயில் நிலையங்கள், பணி மனைகள், பிற போக்குவரத்து சேவைக்கான இணைப்பு, பயணிகளுக்கான வசதிகள், வர்த்தக கட்டடங்கள் உள்ளிட்டவை வரவுள்ளன. இத்தகைய சிக்கலை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Post

"உன்னை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.." -  10 வயது சிறுவனுக்கு உதவ முன்வரும் ஆனந்த் மஹிந்திரா!

Mon May 6 , 2024
10 வயது சிறுவன் ஒருவனின் நம்பிக்கை தோய்ந்த வார்த்தைகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டெல்லியின் கிழக்கு விகார் காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் செயல்பட்டு வரும் ரொட்டி கடை ஒன்றில், பத்து வயது மட்டுமே நிரம்பிய ஜஸ்ப்ரீத் என்ற சிறுவனின் கதை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். சரப்ஜித் சிங் என்ற உணவு ரிவ்யூ செய்யும் நபர் இந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் […]

You May Like