fbpx

குழந்தையை கவனித்துக் கொள்ள 730 நாட்கள் விடுமுறை..!! இது ஆண்களுக்கும் பொருந்தும்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

குழந்தையை கவனித்துக் கொள்ள பெண்களுக்கும், மனைவி இல்லாத ஆண்களுக்கும் 730 நாட்கள் விடுமுறை அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 26 வாரங்களுக்கு (6 மாதங்கள்) மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. முதல் குழந்தை பெற்ற பின்பும், 2-வது குழந்தை பெற்ற பின்பும் 26 வாரங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு 12 வாரங்கள் (3 மாதங்கள்) வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்து கொள்ளலாம். இந்நிலையில், பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறையை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்த வேண்டுமென தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மகப்பேறு விடுமுறையை தவிர்த்து, அதன் பிறகும் குழந்தைகளை கவனித்து கொள்ள அரசு பணியாளர்களுக்கு தனியாக விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை பெண்கள் மட்டுமின்றி, மனைவி இல்லாத ஆண்களும் எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “குழந்தைகளை கவனித்து கொள்வதற்கான 730 நாட்கள் விடுமுறையை பெண் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மனைவி இல்லாத ஆண் அரசு ஊழியர்களும் எடுத்துக் கொள்ளலாம். மத்திய சிவில் சேவை (விடுப்பு) விதிகள், 1972, 43-சி விதியின் கீழ் பணியில் இருக்கும் ஒட்டு மொத்த காலத்திற்கு 730 நாள்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு குழந்தைகளுக்கு 18 வயதாகும் வரை இந்த விடுப்பு பொருந்தும். அதேபோல், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் இந்த விதி பொருந்தும். ஆனால், அவர்களுக்கு எந்த வயது வரம்புமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பிறந்து அல்லது தத்தெடுக்கப்பட்ட 6 மாதங்களுக்குள், ஆண்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில், தாய்மார்களின் சுமையை குறைக்க ஆண்களுக்கான மகப்பேறு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பெண்கள் குழு கோரிக்கை விடுத்தது. சமீபத்தில்தான், அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்றும் ஆண்களுக்கு ஒரு மாதமாக உயர்த்தப்படும் என்றும் சிக்கிம் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாடுகளில் எப்படி?

  • ஸ்பெயினில் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறை 16 வாரங்கள்
  • சுவீடனில் ஆண்களுக்கு 3 மாதங்கள் மகப்பேறு விடுமுறை
  • பின்லாந்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களுக்கு 164 நாட்கள் விடுமுறை
  • அமெரிக்காவில் ஆண்களுக்கான மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவிதில்லை

Chella

Next Post

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Thu Aug 10 , 2023
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு பாரம்பரிய திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி ஒப்புக் கொண்டார். வாமனர் முதல் அடியில் பூமியையும், 2ஆம் அடியில் வானத்தையும் அளந்தார். மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் […]

You May Like