fbpx

தொழிற் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் மாதம் ரூ.750 ஊக்கத்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…?

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.750 வழங்கப்படும்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 30.09.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு சேர்க்கை நடைபெற்று வந்தது. மேலும் தற்போது 10.10.2023 வரை நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம் சேர்க்கை உதவி மையத்தினை அணுக வேண்டும்.

Manufacturing Process Control and Automation (SCVT) மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேசன் மற்றும் Industrial Robotics and Digital Manufacturing Technician (இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன்) தொழிற் பிரிவுகளுக்கு ஓராண்டு பயிற்சி பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.750/- (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்). விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, இரண்டு செட் சீருடைக்கான துணி, தையற் கூலி. இலவச புத்தகங்கள். இலவச காலணி இலவச வரைபட கருவிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் ஆகியன வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி முதல்வர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9789242292 /9444621245/ 8122374342.

Vignesh

Next Post

திருமணத்திற்கு தயாராகும் ஆண்களே..!! இந்த அரிசியை மறந்துறாதீங்க..!! அந்த விஷயம் இதுல இருக்கு..!!

Fri Oct 6 , 2023
நாம் சாப்பிடும் அரிசியில் 20 ஆயிரத்துக்கும் மேல் நெல் ரகங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் சில ரகங்கள் மறைந்துவிட்டது. தற்போது 200 வகையான நெல் ரகங்கள் மட்டுமே உள்ளன. அவை சீரக சம்பா, காட்டு பொன்னி, சின்ன பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா, சிவப்பு அரிசி என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையான பாரம்பரிய அரிசிகள் நோய்களின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதில் பெருமளவு உதவுகிறது. அந்த வகையில், இந்தப் […]

You May Like