தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை (ICDS)
வகை : தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 7,783
பணியிடம் : தமிழ்நாடு முழுவதும்
- பணியின் பெயர் – அங்கன்வாடி பணியாளர்
காலியிடங்கள் : 3,886
கல்வி தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் : மாதம் ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு : 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- பணியின் பெயர் – குறு அங்கன்வாடி பணியாளர்
காலியிடங்கள் : 305
கல்வி தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் : மாதம் ரூ.5,700 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு : 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
- பணியின் பெயர் – அங்கன்வாடி உதவியாளர்
காலியிடங்கள் : 3,592
கல்வி தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு : 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2025
அங்கன்வாடி பணிகளுக்கான அரசாணை : https://drive.google.com/file/d/1nGKRA8p8iFE-pEfm5enXJASlCbQvUxFy/view
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.icds.tn.gov.in/icdstn/career.html