fbpx

8.2% வட்டி.. ரூ.1 லட்சம் வரை வட்டி கிடைக்கும்.. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்..

சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தான் நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக உள்ளது. குழந்தைகள், படிப்பு செலவு, திருமண செலவு என பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக மக்கள் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.. இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

அந்த வகையில் ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை 70 அடிப்படை புள்ளிகள் வரை மத்திய அரசு உயர்த்தியது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமான சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், கிசான் விகாஸ் பத்ரா, அனைத்து அஞ்சலக நேர வைப்புத் திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன? எந்தவொரு தனிநபரும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் வைப்புத்தொகையுடன் இந்த திட்டத்தை தனியாகவோ அல்லது கூட்டாகத் தொடங்கலாம். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் முடிந்த பிறகு கணக்கை மூடலாம். இது மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது மொத்த முதலீடு செய்யப்பட்ட தொகையில் அதிக வருமானத்தை ஈட்ட விரும்பும் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் ஒருவர் அதிகபட்சமாக 60 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.. இதன் மூலம் கிடைக்கும் வழக்கமான வருமானம், மூத்த குடிமக்களின் அன்றாடச் செலவுகளைப் பராமரிக்கப் பயன்படும்.. திட்டம் முதிர்ச்சியடையும் போது, உங்களின் முழுத் தொகையான ரூ. 60 லட்சமும் திருப்பி அளிக்கப்படும். உதாரணமாக மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் ரூ 60 லட்சம் செய்தால், ஒரு காலாண்டுக்கான வட்டி, ரூ 1,23,000 ஆக இருக்கும்.. இத்திட்டத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.. எனவே மொத்த வட்டி ரூ 24,60,000 கிடைக்கும்..

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான (SCSS) வட்டி விகிதம் 2023-24 நிதியாண்டின் (ஏப்ரல்-ஜூன்) முதல் காலாண்டில் ஆண்டுதோறும் 8.2 சதவீதமாக உள்ளது. முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி செலுத்தப்படும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் திறக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வழங்கப்பட்ட வருமான வரி சலுகைகள் கிடைக்கும்..

Maha

Next Post

கவுரவ கொலை: ஓடிப்போன காதலர்கள்! அடித்து, கை காலை உடைத்து, தலையை துண்டித்து கொன்ற கொடூரம்.!

Thu Apr 6 , 2023
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கவுரவக் கொலை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் பெண்மணியின் சகோதரர்கள் தப்பித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தின் ரோக்தக் பகுதியைச் சார்ந்த நிதி பராக் என்ற 20 வயது பெண்ணும் தர்மேந்தர் பராக் என்ற 22 வயது இளைஞனும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு ஓடி […]

You May Like