தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசித்து வருவதாக பேரவையில் அமைச்சர் K.K.S.S.R ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்..
இன்று தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியதற்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளனர்.. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று தெரிவித்ஹ்டார்
அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டும், நிர்வாக வசதிகளுக்காகவும் மாவட்ட பிரிப்பு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.. கடந்த 2020-ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..