fbpx

குன்னூர் பேருந்து விபத்தில் 8 பேர் பலி!… நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீலகிரி மாவட்டம்‌ சுற்றுலாப்‌ பேருந்து பள்ளத்தில்‌ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 54 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே பேருந்து வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்த நிலையில், பயணிகள் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Kokila

Next Post

குடும்ப அட்டை இல்லாதவர்கள் e-Shram என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்..‌.! இவர்கள் மட்டும் தான்..

Sun Oct 1 , 2023
வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு e Shram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில் வெளி மாநிலங்களில் இருந்து […]

You May Like