fbpx

அக்கா, தங்கையை சுற்றி வளைத்த 8 பேர்..!! மாறி மாறி பலாத்காரம்..!! ஒரே சத்தம்..!! ஓடிவந்த மக்கள்..!! பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் உசேன்கஞ்ச் மாவட்டம் பாதேப்பூர் கிராமத்தை சேர்ந்த சிறுமிகளான அக்கா, தங்கை இருவரும் பக்கத்து ஊரில் நடைபெற்ற திருவிழாவை பார்க்கச் சென்றுள்ளனர். பின்னர், திருவிழாவை பார்த்து விட்டு இரவோடு இரவாக வீடு திரும்பியுள்ளனர். வழியில் அவர்களை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல், அவர்களை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இருவரையும் கடத்திச் சென்றனர். பின்னர், அங்கு வைத்து சிறுமிகள் இருவரையும் அந்த கும்பல், மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

அப்போது சிறுமிகள் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனாலும், பொதுமக்கள் அவர்களில் 6 பேரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் 6 பேரையும் கைது செய்தனர். கைதான 6 பேரும் 22 வயதில் இருந்து 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. தலைமறைவான அவர்களது நண்பர்கள் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரிகள் இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் வழக்கில் சிக்கிய கும்பல் சம்பவம் நடப்பதற்கு முன்பு திருவிழா பார்க்கச் சென்ற சகோதரிகளிடம் அத்துமீறியதும், அவர்களிடம் இருந்து செல்போனை பறித்ததும் தெரியவந்தது. அதன் பிறகு தான் அவர்கள் பின் தொடர்ந்து சென்று இந்த கொடூரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

”வீட்ல யாரும் இல்ல... சீக்கிரம் வா”..!! அடிக்கடி உல்லாசம்..!! கர்ப்பமான 15 வயது சிறுமி..!!

Thu Mar 16 , 2023
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், அவரை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்து வரும் 15 […]

You May Like