fbpx

இரவு 8 மணி…!! ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய சம்பவம்..!! உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு..!!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு திடீரென ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். அந்த நாட்களில் மக்கள் ATM-களில் வரிசையில் நின்றது உள்ளிட்ட பல சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. இந்த பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘‘பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசு அறிவித்தது தவறான முடிவு. இத்தகைய முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இந்த உத்தரவால் நாட்டின் அனைத்து குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரவு 8 மணி...!! ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய சம்பவம்..!! உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு..!!

மேலும், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யக் கூடாது. இந்த விவகாரத்தில் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர் தான் முடிவெடுக்கப்பட்டது. இதில், தடை விதிக்கப்பட்டால் முந்தைய காலத்திற்கு செல்லும் சூழல் ஏற்படும். அதனால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம்’’ என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Chella

Next Post

பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயற்சி..!! தலைதெறிக்க ஓடிய கடத்தல்காரர்கள்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

Mon Jan 2 , 2023
ஹரியானாவில் பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயன்ற சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலம் யமுனா நகரில் கடந்த சனிக்கிழமை அன்று ஜிம்மில் இருந்து காருக்கு திரும்பிய பெண்ணை 4 பேர் கடத்த முயன்றுள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில் கடத்தல்காரர்கள் 4 பேரும் தெறித்து ஓடுகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், […]
பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயற்சி..!! தலைதெறிக்க ஓடிய கடத்தல்காரர்கள்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

You May Like