fbpx

ஆசிரியர்களுக்கே இந்த பிரச்சனையா..? அப்படியென்றால் மாணவர்களின் கதி..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்கள் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தடுமாறுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 152-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1300-க்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவில் உள்ள கணித ஆசிரியர்களில் 80% பேருக்கு இயற்கணிதம் உள்ள பாடங்களில் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லை.

நான்காம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியா்கள் சரியாக பதிலளித்துள்ளனர். ஆனால், 7ஆம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக விடையளித்தனர். வடிவியல் பாடம் சார்ந்த அடிப்படை கேள்விகளுக்கு 32.9 சதவீத ஆசிரியர்கள் தவறான புரிதலோடு பதில் அளித்தனர். தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளை செய்தனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’90% பணி நிறைவு’..!! ’இன்னும் 10 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்’..!! சசிகலா அறிவிப்பு..!!

English Summary

A new study has revealed that 80% of maths teachers in India struggle to answer even basic questions.

Chella

Next Post

நீங்கள் குளிக்க பயன்படுத்தும் ’Soap’ தரமானதா..? எப்படி கண்டறிவது..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Thu Jul 4 , 2024
Based on TFM size there are three types of soaps Grade 1, Grade 2 and Grade 3.

You May Like