fbpx

உத்தரபிரதேசத்தில் ஒரே மருத்துவமனையில் 16 மாதத்தில் 81 கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று

உத்திரபிரதேசம் மீரட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 13 பேருக்கு HIV தொற்று இருப்பது தெரிய வந்த நிலையில் அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று எப்படி வந்தது என்றே தெரியாதது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம் தொடர்ந்து மருத்துவமனையின் பழைய பதிவுகளை ஆராய்ந்த போது 2022- 23 ஆண்டு கால கட்டத்தில் 33 கர்ப்பிணிகளுக்கும், அதற்கு முன்பு 35 கர்ப்பிணிகளுக்கும் என பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

முறையாக கணக்கிட்டு பார்த்ததில் 16 மாதங்களில் 81 கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தோற்று கண்டறியப்பட்டு 35 பேருக்கு பிரசவம் நடைபெற்று உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரே அரசு மருத்துவமனையில் இத்தனை கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டது எப்படி? என்பது தான் அனைவருக்கும் கேள்வியாக உள்ளது. இதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

Maha

Next Post

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு….! சம்பளம் எவ்வளவு தெரியுமா…..?

Mon Aug 7 , 2023
படித்த மற்றும் வேலை படிக்காத வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், contractual electrical supervisor, contractual assistant Rig electrician, contractual assistant fitter& others போன்ற பணிகளுக்கான 69 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான முழுமையான விவரங்களை இந்த செய்தியை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம். […]

You May Like