fbpx

ஓவர்நைட்டில் கோடீஸ்வரரான 88 வயது முதியவர்.. லாட்டரியில் அடித்த ரூ.5 கோடி ஜாக்பாட்…

பஞ்சாப் மாநிலத்தில் 88 வயதான மஹந்த் துவாரகா தாஸ் என்ற முதியவருக்கு ரூ.5 கோடி லாட்டரி பரிசு கிடைத்துள்ளது..

மஹந்த் துவாரகா தாஸ் தனது 13-வது வயதில், 1947-ம் ஆண்டு தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தார். தற்போது சண்டிகரில் உள்ள டெரபஸ்ஸி என்ற பகுதியில் வசித்து வருகிறார்.. சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட அவர் அடிக்கடி லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கம் கொண்டவர்.. அந்த வகையில் அவர் சமீபத்தில் பஞ்சாப் அரசு நடத்தும் லாட்டரியில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார்.. இதில் அவருக்கு ரூ.5 கோடி பரிசு கிடைத்துள்ளது..

தனது பரிசுத்தொகையில் பாதிப் பணத்தை தேரா என்ற அமைப்புக்கு நன்கொடையாக அளிப்பதாகவும், மீதிப்பணத்தை இரு மகன்களுக்கும் சமமாக வழங்க உள்ளதாகவும் மஹந்த் துவாரகா தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் கடந்த 35-40 வருடங்களாக லாட்டரி வாங்கி வருகிறேன்.. ” என்று கூறினார்.

மஹந்த் துவாரகா தாஸுக்கு வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு 3.5 கோடி ரூபாய் கிடைக்கும் என்று தெரிகிறது.. லாட்டரி உதவி இயக்குநர் கரம் சிங் இதுகுறித்து பேசிய போது “பஞ்சாப் மாநிலம் லோஹ்ரி மகர் சங்கராந்தி பம்பர் லாட்டரி 2023 முடிவுகள் ஜனவரி 16 அன்று அறிவிக்கப்பட்டன. அவர் மஹந்த் துவாரகா தாஸ் முதல் பரிசான ரூ. 5 கோடியை வென்றார். 30% வரி கழிக்கப்பட்ட பின் அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

திருமணத்திற்கு மறுத்த பெற்றோர்..!! திடீரென எடுத்த முடிவால் பறிபோன மாணவனின் உயிர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Fri Jan 20 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பில் 20 வயது மாணவனும் 16 வயது சிறுமியும் படித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கையில், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிறுமி மைனர் என்று கூறி எதிர்த்தனர். இதனால், மனமுடைந்த இருவரும் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்துள்ளனர். […]

You May Like