fbpx

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!! எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்..? தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!

தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 18ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் தனித் தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19ஆம் தேதி 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூலை 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 பணமாக சேவை மையங்களில் செலுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூலை 26, 27ஆம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன் ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும். முதன்முதலாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி பதிவுத்தாள் நகல், சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும். இது தவிர அனைத்து தனித்தேர்வர்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய சுய முகவரி உறையை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இணைய வழியிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்..!! 535 கிமீ பயணிக்கலாம்..!! Benz நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!!

English Summary

The 8th class general examination for individual candidates will be held from 19th to 23rd August. Interested candidates can apply from 18th July onwards.

Chella

Next Post

8 வருட லவ்.. திருமணம் ஆன 2 மாதங்களில் உயிரிழந்த ராணுவ வீரரின் காதல் கதை..!! - மனைவி உருக்கம்

Tue Jul 9 , 2024
Late Army Captain Anshuman Singh received the Keerthi Chakra award on behalf of his wife Smriti Singh from President Draupadi Murmu yesterday.

You May Like