90 ஸ் கிட்ஸ்கள் விதவிதமாக பேனர்களை வைத்து வரும் நிலையில் தலைப்புச் செய்திக்குள் கல்யாண பேனரைக் கொண்டு வந்து நண்பர்கள் பரபரப்பாக்கினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சேமன்விளையில் தனது நண்பரின் பிறந்த நாளுக்காக பேனர் வைத்து கொண்டாட நண்பர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து நண்பர்கள் குழு ஒன்றிணைந்து திடீரென கிரியேட்டிவாக யோசித்து தலைப்புச் செய்தியைப் போல் கல்யாண பேனரை தயார் செய்துள்ளனர்.

’’90’ஸ் கிட்ஸ் திருமணம் … சேனம்விளை அருகே பரபரப்பு … அதிர்ச்சியில் மக்கள்’’ இந்த தலைப்புச் செய்தியுடன் மணமக்களின் போட்டோக்களை போட்டு பேனர் வைத்து கலாய்த்துள்ளனர். முதலில் படிக்கும்போது என்ன செய்தி என யாருக்கும் விளங்கவில்லை. பின்னர்தான் திருமண நிகழ்ச்சிக்கான பேனர் என புரிந்தது. இந்த பேனர் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
சேனம்விளையைச் சேர்ந்த நபர் துபாயில் கட்டுமான பொறியாளராக வேலை பார்த்து வருகின்றார். பால் மகேர் சாலல் என்பவருக்கும் சென்னையல் ஐடி ஊழியராக வேலை பார்க்கும் ஆர்த்தி சுரேஷ் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. இஇதனால் அவர்களது நண்பர்கள் சார்பில் வாழ்த்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பேனரில் கல்யாண சம்மந்தம் விலக்குவோருக்கு எதிரான போராட்டம் என தொடங்கியிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் மணமக்கள் பிரபலமாகி வருகின்றனர்