பயணிகளின் வசதியை உறுதி செய்யவும், கோடைக் காலத்தில் பயணத் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவும் , இந்திய ரயில்வே கோடை காலத்தில் 9111 ரயில்களை இயக்கி வருகிறது.
2023ம் ஆண்டு கோடைக் காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கணிசமான உயர்ந்துள்ளது, சென்ற ஆண்டு மொத்தம் 6369 முறை ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 2742 அதிகரித்துள்ளது. இது பயணிகளின் கோரிக்கைகளை திறம்பட இந்தியன் ரயில்வே பூர்த்தி செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க கூடுதல் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன, கூடுதல் ரயில்கள் முக்கிய ரயில் பாதைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்கின்றன.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களிலிருந்து கோடைகால பயண அவசரத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா முழுவதும் பரவியுள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களும் இந்தக் கூடுதல் பயணங்களை இயக்கத் தயாராக உள்ளன.