fbpx

இந்தோனேஷியாவில் 99 குழந்தைகள் பலி..!! 206 பேரின் உடல்நிலை மோசம்..!! இந்திய இருமல் மருந்துதான் காரணம்..!!

இந்தோனேஷியாவில் 99 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துதான் காரணம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் புதி குனாதி சாதிக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆப்பிரிக்கா, காம்பியாவில் இருமல் மருந்து உட்கொண்ட 66 குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்திய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை சாப்பிட்டது தான் இதற்கு காரணம் என்று காம்பியா அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக இந்திய மருந்து நிறுவனமான மெய்டனுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தோனேஷியாவில் 99 குழந்தைகள் பலி..!! 206 பேரின் உடல்நிலை மோசம்..!! இந்திய இருமல் மருந்துதான் காரணம்..!!

இந்நிலையில், இந்தோனேஷியாவிலும் 99 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அனைத்து வகையான சிரப் மற்றும் நீர்ம மருந்துகளின் விற்பனைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. குழந்தைகளுக்கு தீவிர சிறுநீரக பாதிப்பை இந்த இருமல் மருந்துகள் ஏற்படுத்தக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்து. இந்தோனேசியாவில் 99 குழந்தைகள் உயிரிழப்புக்கும் இந்த இருமல் மருந்துகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர், 206 குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஜாலி...! வரும் 27 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...! அரசு முக்கிய அறிவிப்பு...!

Sat Oct 22 , 2022
வரும் 27 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. பண்டிகை நாட்கள் இன்று வந்து விட்டாலே மக்களும் மாணவர்கள் என அனைவரும் விடுமுறையை இருப்பது வழக்கமான ஒன்று. ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 27, வியாழன் அன்று விடுமுறை என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இடைநிலைக் கல்வி இயக்குநர் […]

You May Like