உத்திரபிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்திருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் மாமா உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் பர்ஸா கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணா வர்மா என்பவரது மகன் விவேக் என்ற 10 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை காணாமல் போய் இருக்கிறான். இது தொடர்பாக வர்மா காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில் அதே இரவு அந்த சிறுவனின் சடலம் கழுத்தில் வெட்டுக் குறியுடன் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
காவல்துறையின் விசாரணையில் சிறுவனின் மைத்துனர் அனுப் என்பவர் சிறுவனின் மாமா சிந்தாராம் ஆகியோரும் மந்திரவாதியுடன் இணைந்து கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இவர்கள் மூவரும் சேர்ந்து சிறுவனை கடத்திச் சென்று கூர்மையான ஆயுதத்தால் கடவுளுக்கு நரபலி கொடுக்க சிறுவனின் கழுத்தை அறுத்துள்ளனர். மேலும் சிறுவனின் மைத்துனரான அனுபிற்கு ஒரு மகன் இருக்கிறான். அந்தச் சிறுவன் மன நலம் பாதிக்கப்படும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமலும் இருந்து வந்த நிலையில் எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் அதற்கு தீர்வு கிடைக்காததால் மந்திரவாதியின் உதவியை நாடியிருக்கின்றனர். அந்த மந்திரவாதி ஒரு சிறுவனின் உயிரை நரபலி கொடுத்தால் இவரது மகன் குணமடைவான் எனக் கூறியிருக்கிறான். இதனைத் தொடர்ந்து இந்த படுபாதகச் செயலில் அவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.