உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 வயது காது கேளாத சிறுமி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 42 வயதுடைய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு பிறந்ததில் இருந்தே செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ள நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, இதையறிந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அந்த நபர் தப்பியோடிய நிலையில், பலத்த காயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 42 வயதான மனோஜ் ராய்க்வார் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Read More : எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சிறந்த பைனான்ஸ் வழங்கும் நிறுவனங்கள் பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!