fbpx

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமி..!! நோட்டமிட்ட மர்ம நபர்..!! திடீரென உள்ளே புகுந்து பாலியல் பலாத்காரம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 வயது காது கேளாத சிறுமி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 42 வயதுடைய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு பிறந்ததில் இருந்தே செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, இதையறிந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அந்த நபர் தப்பியோடிய நிலையில், பலத்த காயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 42 வயதான மனோஜ் ராய்க்வார் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More : விஜய் மாநாட்டில் இதை கவனிச்சீங்களா..? பாஜகவின் ’பி’ டீம் தான் தவெக..!! இதுதான் ஆதாரம்..!!

English Summary

Knowing this, a mysterious person entered the girl’s house and forcibly raped her.

Chella

Next Post

மாநாட்டில் விஜய் முன்னிலையில் இணையும் அரசியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா..? பரபரப்பு தகவல்..!!

Sun Oct 27 , 2024
As the first state conference of actor Vijay's Tamil Nadu Vetri Kazhagam is being held today, information has been released about some of the celebrities who will be attending the conference.

You May Like