fbpx

தெருநாய்கள் கடித்து குதறியதில் 12 வயது சிறுவன் பரிதாப பலி..!! தொடரும் சோக சம்பவம்..!!

நாட்டில் சமீபகாலமாக தெருநாய்களால் கடி வாங்குபவர்களும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு கொடூர சம்பவம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. கானா கவுந்தியா கிராமத்தில் அயான் (12) என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அங்கு தெருநாய்கள் கூடியது. இதனால் சிறுவர்கள் நாய்களுக்கு பயந்து ஓடினர். அப்போது, சிறுவன் அயான் ஓடும்போது தரையில் விழவே, தெருநாய்கள் அவன் மீது பாய்ந்து கடித்து குதறின. இதனால் சிறுவன் வலியால் கதறி துடித்தார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிறுவன் அயான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயமடைந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரேலியில் தெருநாய்கள் குழந்தைகளைத் தாக்குவது இது முதல் முறையல்ல. 2 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி தெருநாய்கள் தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நாய் கடித்து சிறுவன் உயிரிழந்த நிகழ்வுக்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், தங்கள் பகுதி தெருக்களில் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு பலமுறை கடிதம் எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

Chella

Next Post

டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்தும் திமுக..? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பதில்..!!

Wed May 3 , 2023
டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 306 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் செயல்படுவது போல் சில பத்திரிக்கைகள் செய்திகளில் வெளியிடுவது வேதனை அளிக்கிறது. காலை 12 மணி முதல் இரவு […]

You May Like