fbpx

13 வயது சிறுமி.. குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம்; பெற்ற தந்தை செய்த கேவலமான செயல்..!

வேலூரில் தந்தையே தனது 13 வயது பெண் குழந்தையை கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாநகராட்சி விருபாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி சங்கர் (45). இவருடைய மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டதால், தனது 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது அவரது 13 வயது மகளை அவரே பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இதற்கிடையில் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமையை சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதால், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், வேலூர் சமூகநலத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட சமூக நலத்துறையினர்
விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரின் தந்தை தான் காரணம் என அவர்களுக் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அளித்த புகாரின் பேரில், சங்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையே மகளை கர்ப்பமாக்கி, குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Rupa

Next Post

’தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை’..! ஆனால், நாங்கள் போட்டியிடுவோம்..! - சீமான்

Wed Aug 3 , 2022
தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை என்றும், ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. இன்றைய […]
’இனி அரசுக்கே இடம் தேவையென்றால் ஜி-ஸ்கொயர் நிறுவனத்திடம்தான் வாங்க வேண்டும்’..! சீமான் விமர்சனம்

You May Like