fbpx

13 வயது சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! தாய் இல்லாத நேரத்தில் தந்தை பார்த்த கொடூர வேலை..!! மருத்துவர்கள் அதிர்ச்சி

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தின் ஜீவர்கி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. முதலில் இதை சாதாரண பாதிப்பு என நினைத்த சிறுமியின் தாயார், பிரச்சனை சரியாகாத நிலையில், ஜனவரி 31ஆம் தேதி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுமியிடம் உண்மையை விசாரித்தனர். அப்போது தான் இந்த கர்ப்பத்திற்கு காரணம் சிறுமியின் தந்தையே என்பது தெரியவந்தது.

சிறுமியின் தாயார் வயல் வேலைக்கு சென்றபோது, தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், விவரம் அறிந்த சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Chella

Next Post

Valentine's Day..!! காதலர் தினத்திற்கு ஆணுறை இலவசம்..!! எப்படி பெறலாம்..? அரசு முக்கிய அறிவிப்பு..!!

Thu Feb 2 , 2023
பிப்ரவரி மாதம் என்றாலே இளைஞர்களின் நினைவுக்கு வருவது வெலன்டைன்ஸ் டே (Valentine’s Day) என்ற காதல் தினம். அன்றைய தினம் தங்கள் இணையருடன் கொண்டாடுவதற்கு காதலர்கள் பல திட்டங்களை போட்டி தயாராவது வழக்கம். இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் அரசாங்கமே காதலர் தினத்தை கொண்டாட ஒரு விநோத ஏற்பாடை செய்திருக்கிறது. இது அந்நாட்டின் காதலர்களுக்கு காதலர் தின பரிசாக அமைந்துள்ளது. அதாவது, பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்து […]

You May Like