உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஜம்முவைச் சேர்ந்த 16 வயது சிறுமி, இளைஞர் ஒருவருடன் ஓடிச்சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை தாலிப் அலி கூறுகையில், அவர் தனது குடும்பத்துடன் ஜம்முவில் 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட ஆஷு 4 மாதங்களுக்கு முன்பு ஜம்முவுக்கு வந்தார். தன்னுடைய 16 வயது மகள் அவனுடன் ஓடிப்போனதாக கூறினார். அதன்பிறகு, உ.பி.யின் ஹபூர் மாவட்டத்துக்கு வந்த ஆஷு, பீம்நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த மார்ச் 22ஆம் தேதி சிறுமியை ஆசு கழுத்தை நெரித்து கொன்றார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி போலீசாரை குழப்ப முயன்றனர். ஆனால், கடைசியில் வசமாக சிக்கி கொண்டனர் இளைஞரின் குடும்பத்தினர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்ட கொலையே காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக ஹாபூர் காவல் நிலையப் பொறுப்பாளர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.