பீகார் மாநிலம் பாங்கா மாவட்டம் தோரையா காவல் நிலையத்திற்கு உட்பட்ட 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பீகாரின் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரான மைனர் சிறுமி, குற்றம் சாட்டப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்களுடன் ஃபேஸ்புக்கில் நட்புடன் பழகி வந்துள்ளார். மேலும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் இளைஞர்களை சந்திக்க கடந்த மார்ச் 16ஆம் தேதி சென்ற நிலையில், அன்றைய தினம் இரவு அந்த 3 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இளைஞர்களிடம் இருந்து ஒருகட்டத்தில் தப்பிய சிறுமி, தோரையா காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், இளைஞர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அண்டை மாநில சிறுமி ஃபேஸ்புக் நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.