fbpx

குற்றாலத்தில் 17 வயது சிறுவன் பலி… அதிர்ச்சி தகவல்…!

குற்றாலத்தில் 17 வயது சிறுவன் பலியானது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தென் தமிழகப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்காசி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் நேற்று (மே 17) காலை முதல் பலத்த மழை பெய்தது. அந்த வகையில், தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது.

மிதமான மழை பெய்வதால் பழைய குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிற்பகல் சரியாக 2 மணி அளவில் கனமழை பெய்த நிலையில், மலையிலிருந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து, அருவியில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஓடத் தொடங்கினர். வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார். குற்றாலத்தில் சிறுவன் பலி குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட உள்ளதை முன்கூட்டியே வனத்துறை எச்சரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறித்து பிற்பகல் 1.54 மணிக்கு குற்றால காவல் நிலைய போலீசாரை அழைத்து வனக்காவலர் தகவல் தெரிவித்துள்ளார். வனக்காவலரின் எச்சரிக்கையை தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவியில் இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். வனக்காவலரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பழைய அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. பழைய குற்றால அருவியில் எச்சரிக்கை விடுத்து சுற்றுலா பயணிகளை வெளியேற்றி இருந்தால் சிறுவனை காப்பாற்றியிருக்கலாம்.

Vignesh

Next Post

புது வீடு கட்ட போறீங்களா? இந்த ரூல்ஸ் எல்லாம் ரொம்ப முக்கியம்!!

Sat May 18 , 2024
சின்னதாக ஒரு இடம் வாங்கி, அதில் விருப்பப்படி வீடு கட்டிக் கொண்டு குடிபுகுவது அற்புதமான ஒன்று. நாம் வாங்கும் மனையை முழுவதுமாகப் பயன்படுத்தி வீடு கட்டுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பின்பற்றிதான் வீடு கட்ட வேண்டும். வீடு கட்ட அரசின் விதிமுறைகள் என்ன? பொதுவாக எவ்வளவு மனை அளவு வைத்திருக்கிறோமோ அந்த அளவில் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. 1,200 சதுர […]

You May Like