டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து பைக்கை வேகமாக ஓட்டி, டிடிஎப் வாசன் அதை யூ டியூப்பில் வெளியிட்டு இருந்தார்.
இதுகுறித்து கோவை மாநகரக் காவல், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செப்டம்பர் 14-ஆம் தேதி டிடிப் வாசன் என்ற நபர் அவரது பைக்கில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் உக்கார வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும், அஜாகிரதையாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போத்தனூர் காவல்துறையினர் ஐபிசி 279 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 184 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் டிடிஎஃப் வாசன் மீது சூலூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.