காஞ்சிபுரம், சோமங்கலம் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதில் 3 வயது குழந்தை பலி.
தனியார் கல்லூரி பேராசிரியரான ராமகிருஷ்ணன் என்பவர் தனதுமனைவி மற்றும் 3வயது குழந்தையுடன் ஷாருக்கானின் ஜவான் பட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் திரும்பியபோது சோமங்கலம் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்துள்ளது, எதிர்பாரா விதமாக மாட்டின் மீது பைக் மோதி நிலைதடுமாறி பைக்கில் பயணித்த அனைவரும் கீழே விழுந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி, கீழ விழுந்துள்ள ராமகிருஷ்ணனின் 3வயது குழந்தை ருத்ரேஷ் மீது மோதி விபத்து. இந்த விபத்தில் 3வயது குழந்தை ருத்ரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.