fbpx

எழுத்தாளரான 4 வயது சிறுவன்!… 4 ஆண்டுகள் 218 நாட்களில் புத்தகம் எழுதி வெளியிட்ட ஆச்சரியம்!… கின்னஸ் சாதனை!…

அபுதாபியில் சுமார் 4 ஆண்டுகள் 218 நாட்களில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ள 4வயதே ஆன சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபியைச் சேர்ந்த சயீத் ரஷீத் அல்மெய்ரி என்ற சிறுவனக்கு 4 வயது தான் ஆகிறது. சரியாகச் 4 ஆண்டுகள் 218 நாட்களில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று புத்தகம் வெளியான சில நாட்களிலேயே ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகின் மிக இளம் வயதில் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அதாவது, மார்ச் 9ம் தேதி அவரது சயீத் என்ற யானையும் கரடியும் (The Elephant Saeed and the Bear) என்ற குழந்தைகள் புத்தகம் வெளியானது. இரு விலங்குகளுக்கு இடையே எதிர்பாராத நட்பு ஏற்பட்டதைப் பற்றிய கதையை உள்ளடக்கிய இந்த புத்தகம் வெளியாகி, 1,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையான பிறகே சிறுவனின் சாதனைப் பதிவு சரிபார்க்கப்பட்டது. மேலும், சயீத் தனது மூத்த சகோதரி அல்தாபியிடமிருந்து உத்வேகம் பெற்று தனது புத்தகத்தை எழுதியுள்ளார். 8 வயதாகும் மூத்த சகோதரி அல்தாபி மிக இள வயதில் பலமொழிகளில் புத்தக சீரீஸ் வெளியிட்ட பெண் என்ற சாதனையைப் படைத்தவர். முன்னதாக, மிக இளமையில் பலமொழி புத்தகத்தை வெளியிட்ட பெண் என்ற சாதனையையும் வசப்படுத்தியவர்.

புதுமையை விரும்பும் அல்தாபி நாட்டின் இளைய தொழில்முனைவோர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். உள்நாட்டு பதிப்பகமான ரெயின்போ சிம்னி எஜுகேஷனல் என்ற நிறுவனத்தை நடத்துகிறார். “நான் என் சகோதரியை மிகவும் நேசிக்கிறேன், அவளுடன் எப்போதும் விளையாடுவதை நான் ரசிக்கிறேன். நாங்கள் ஒன்றாகப் படிக்கிறோம், எழுதுகிறோம், வரைகிறோம், மேலும் பல செயல்களை ஒன்றாகச் செய்கிறோம். இது என் சொந்த புத்தகம் என்றாலும் நான் அதை அவளால் ஈர்க்கப்பட்டே எழுதினேன். ” என்று சயீத் ரஷீத் அல்மெய்ரி கூறுகிறார். தன் புத்தகம் பற்றிக் கூறும் அவர், “இது யானை மற்றும் ஒரு துருவ கரடி பற்றிய கதை இது. யானை உல்லாசமாக இருந்தது, அது ஒரு துருவ கரடியைப் பார்த்தது. கரடி தன்னைச் சாப்பிடப் போகிறது என்று நினைக்கிறது. ஆனால், இறுதியில், யானையிடம் கருணை காட்டுகிறது. இருவரும் நண்பர்களாகி ஒன்றாக பிக்னிக் செல்கிறார்கள்” என்று தெரிவிக்கிறார்.

Kokila

Next Post

2030க்குள் சாகா வரம்!... மனிதர்களின் மரணத்தை தடுக்கும் ரோபோ!... கூகுள் முன்னாள் விஞ்ஞானி தகவல்!

Thu Apr 6 , 2023
2030ஆம் ஆண்டுக்குள் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெற வாய்ப்பு உள்ளது என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே […]

You May Like