உத்தரபிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதை செய்தது அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் என்பது அதை விட அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.
கொடூரமான வன்புணர்வுக்கு ஆளான சிறுமி எப்படியோ வீட்டிற்கு வந்துள்ளார். தனக்கு நேர்ந்ததை வீட்டில் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்து போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அரங்கேறி வரும் நிலையில் 12 வயது சிறுவன் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.