fbpx

மனைவி உட்பட 7 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர நபர்.. மாமியாரை கூட விட்டு வைக்கல..!! – 20 ஆண்டுகளாக அறங்கேறிய கொடூரம்..

பிரேசிலின் நோவோ ஓரியண்டே என்ற பகுதியில் 54 வயதான நபர், தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த நபர் தனது மனைவியை திருமணம் செய்ததில் இருந்து வீட்டு சிறையில் வைத்துள்ளார். மனைவியை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தன்னுடன் வெளியே அழைத்து சென்றுள்ளார். அண்டை வீட்டுக்காரர்கள் எவருக்கும் அவரது மனைவி, குழந்தைகள் பற்றி தெரியாது.

வீட்டு சிறையில் இருந்து தப்பித்த மனைவி மற்றும் மகள்கள் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த புகாரில், எங்களுக்கு திருமணம் ஆகி 3 முதல் 22 வயதுக்குட்பட்ட ஏழு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் குளிப்பதையும் ஆடை அணிவதையும் பார்க்க எனது கணவர் வீட்டின் சுவர்களில் துளைகளை இட்டுள்ளார். எனது 3 வயது மகள் உட்பட எனது அம்மாவையும் 20 ஆண்டுகளாக பாலியல் வன் கொடுமை செய்து வந்துள்ளார் என தெரிவித்தார்.

இதற்கு முன், வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட எனது அம்மாவும் அந்த நபரால் துன்புறுத்தப்பட்டு, உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மரணத்திற்குப் பிறகு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடல் நலக்குறைவு ஏற்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மகள்களில் ஒருவர் அந்நபருக்கு தூக்க மாத்திரை கொடுத்தபோதுதான் தப்பித்து வந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கைதான அந்த நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த நபர் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாகவும் விசாரணை விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Read more ; 33 வது பிறந்த நாளை கொண்டாடும் பீஸ்ட் பட நடிகை.. வாய்பிளக்க வைக்கும் சொத்து  மதிப்பு..!!

English Summary

A 54-year-old man in Novo Oriente, Brazil, has been arrested by police for sexually abusing his wife, seven children and mother-in-law for 20 years.

Next Post

வதந்திகளை நம்பாதீங்க.. Group 4 பணியிடங்கள் அதிகரிப்பு தொடர்பாக TNPSC விளக்கம்

Sun Oct 13 , 2024
TNPSC has requested you not to believe rumors circulating on social media regarding TNPSC Group 4 vacancies.

You May Like