உப்பு கல்லை விட மிக சிறிய அளவிலான பை ஆன்லைன் ஏலத்தில் 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகியுள்ளது. அந்தவகையில் நேரடியாக ஏலம் நடத்தப்படுவது மட்டுமின்றி ஆன்லைனிலும் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. விலை உயர்ந்த பொருள்கள் முதல் அரிய வகை பொக்கிஷங்கள் வரை பல பொருள்கள் ஏலம் விடப்படுகின்றன. ஃப்ளோரசண்ட் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள இந்த மைக்ரோஸ்கோபிக் பையை லூயின் உய்ட்டன்என்ற பேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் பையன் அளவே வெறும் 0.03 அங்குலத்திற்கு குறைவு. இந்தப் பையை வாங்கியவருக்கு அதை பார்க்கக் கூடிய வகையில் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோஸ்கோப் வழங்கப்பட்டுள்ளது. கல் உப்பை விட சிறிய அளவிலான இந்த பை ஆன்லைனில் 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.