எந்த ஒரு உயிரினம் உருவாகவும் இனப்பெருக்கம் அவசியம். அது பால்இனப்பெருக்கமாக இருக்கலாம், அல்லது பாலிலா இனப்பெருக்கமாக இருக்கலாம். பால் இனப்பெருக்கத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனால் நாம் பாலிலா இனப்பெருக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளவோம். எந்த ஒரு உ யிரின வகையில் ஆண் இனம் மிக குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலும் இருக்கிறதோ அந்த இனத்தை சேர்ந்த பெண் உ யிரினம் ஆண் வி ந்தணுவின் துணை இல்லாமலேயே தனது சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றிருக்கும். இதையே பாலிலா இனப்பெருக்கம் என்கிறோம்.
கலிபோர்னியா காண்டோர் என்பது அமெரிக்காவிலும் மெக்ஸிக்கோவிலும் வாழும் ஒரு பறவை இனம். இவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவாக வெறும் 500 மட்டுமே உள்ளன. எனவே இந்த இனத்தை பாதுகாக்கவே மருத்துவ ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ஒவ்வொரு பறவையும் இங்கே தனித்தனியே கவனிக்கப்படுகின்றன. இவ்வாறு சமீபத்தில் பொரித்த கண்டோர் குஞ்சுகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் தாயின் DNA மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டது. ஆணின் DNA இல்லாமல் குஞ்சு பொரித்தது இதுவே முதல் முறை என்கின்றனர் அறிஞர்கள்.
புணர்ச்சியற்ற இனப்பெருக்கம் ஆண் இனம் இல்லாவிட்டால் மட்டுமே நடக்கும் என்பது தான் இத்தனை நாட்களாக அறிவியலில் இருந்த ஒன்று. ஆனால் கலிபோர்னியா காண்டோர் இனத்தில் அதிகமான ஆண் பறவைகள் இருந்தும் பெண் பறவை இவ்வாறு புணர்ச்சியற்ற முறையில் குஞ்சுகளை பொரித்தது அறிவியலையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற பு ணர்ச்சியற்ற இனப்பெருக்கம் தேள், தேனீ போன்ற பூச்சிகளிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பறவையினத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த புணர்ச்சியற்ற இனப்பெருக்க முறையில் இதுவரை 2 குஞ்சுகள் வெவ்வேறு தாய்களுக்கு பிறந்துள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவை இரண்டுமே இறந்துவிட்டன. இதில் ஆச்சரியம் என்னவெனில் இதன் தாய் பறவைகள் ஆரம்பம் முதல் புணர்ச்சி முறையிலேயே ஆணுடன் சேர்ந்து குஞ்சு பொரித்தவை. இடையில் மட்டும் இப்படி வித்தியாசமான குஞ்சுகள் பிறந்தது அறிவியலில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்.