fbpx

400 பேர் சென்ற படகு தீப்பிடித்து பயங்கர விபத்து!. 50 பேர் பலி!. 100க்கும் மேற்பட்டோர் காயம்!. சமையல் செய்தபோது நிகழ்ந்த சோகம் !

Boat fire: காங்கோவில் 400 பயணிகளுடன் சென்ற படகு திடீரென தீப்பிடித்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது. அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து உள்ளனர். அப்போது துரதிருஷ்டவசமாக படகும் ஆற்றில் கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் படகில் இருந்து 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். படகு தீப்பிடித்த விபத்துக்கு பெண் ஒருவர் சமையல் செய்ததே காரணம் என கூறப்படுகிறது.

Readmore: மாணவர்கள் சென்ற மினி வேன் திடீரென 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!! படுகாயங்களுடன் சிகிச்சை..!! திண்டுக்கல்லில் சோகம்..!!

English Summary

A boat carrying 400 people caught fire and caused a terrible accident!. 50 people died!. More than 100 were injured!. The tragedy occurred while cooking!

Kokila

Next Post

இதெல்லாம் தேவையா..? 0.01 நொடியில் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்த இந்திய வீரர் நிதின் குப்தா..!! நடந்தது என்ன..?

Thu Apr 17 , 2025
India's Nitin Gupta snatched the gold medal from a Chinese athlete in a single second at the Asian Championships.

You May Like