fbpx

மர்ம பொருள் வைத்து விளையாடிய சிறுவர்கள்! பரிதாபமாக பலியான 11 உயிர்கள்!

சூடான் நாட்டில் சிறுவர்கள் தெரியாமல் கையில் எடுத்து விளையாடிய மர்ம பொருள் வெடித்ததில் 11 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான சூடானில் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது. இந்த காலகட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டு போரினால் உயிரிழந்தனர் . போர்க்காலங்களில் அப்பகுதியில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் இன்னும் அப்பகுதிகளில் காணப்படுகின்றன. சூடான் நாட்டில் பாகர் அல் ஹாசன் என்ற மாகாணத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கையில் ஒரு மர்ம பொருள் ஒன்று கிடைத்திருக்கிறது. அந்தப் பொருள் என்ன என்று தெரியாமல் சிறுவர்கள் அதை வைத்து விளையாடி உள்ளனர்.

சிறுவர்கள் விளையாடிய போது அந்தப் பொருள் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டு வந்தால் பகுதி மக்கள் சிறுவர்களை வீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பரிதாபமாக இந்த சம்பவத்தில் 11 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஒரு சிறுவனுக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சூடான் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் போர்க்காலங்களில் வீசப்பட்ட குண்டுகளில் வெடிக்காத ஒரு வெடிகுண்டு சிறுவர்களின் கையில் கிடைத்திருக்கிறது. அதனை வைத்து அவர்கள் விளையாடிய போது எதிர்பாராத விதமாக வெடித்து 11 சிறுவர்களின் உயிரை குடித்திருக்கிறது. சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Baskar

Next Post

கோர விபத்து: 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்! 19 பேர் பரிதாப பலி!

Sun Mar 19 , 2023
பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து 63 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதாரிபூர் மாவட்டத்தில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இந்த கொடூர விபத்தில் 19 பேர் பலியாகியிருப்பதாகவும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல் துறை 40 பயணிகளுடன் […]

You May Like