ஸ்பா நிலையத்தில் சட்டவிரோதமாக இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஸ்பா நிலையத்தில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளது. அதன் பேரில் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண், விபச்சார தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், சென்னை திருவான்மியூர் மேற்கு காமராஜர் நகர் 5-வது பிரதான சாலையில் உள்ள ஒரு ஸ்பா நிலையத்தில் மசாஜ் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்படதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஸ்பா நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சிவகங்கை மாவட்டம் மேலையூர் அருகே உள்ள தொண்டையூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (31) என்பவர் சட்டவிரோதமாக ஸ்பா நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அரவிந்தை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அங்கு பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய இரண்டு இளம்பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
Read More : ஆபாச வீடியோக்களை பார்த்து ஆசையை அடக்க முடியாத மாமனார்..!! மருமகளை உடலுறவுக்கு அழைத்த பரபரப்பு சம்பவம்..!!