15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சுமார் ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா என்கிற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிய சிறுவன், தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். குஜராத் அழைத்துச் சென்று அங்கு ஒரு இடத்தில் சிறுமியை தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சுமார் ஒருமாதமாக அந்த சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். இதற்கிடையே, தனது மகளை காணவில்லை என்று சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசாரும் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிறுவன் ஒரு மதத்திற்கு பின்னர் குஜராத்தில் இருந்து தனது கிராமத்திற்கு திரும்பி இருக்கிறார். வழியில் நாக்ரா நகரில் இருக்கும் கட்வார் மோர் அருகே அச்சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியிடம் என்ன நடந்தது என்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீசாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அச்சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.