fbpx

அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு..!! கிரிக்கெட் வீரர் முரளி விஜய் பரபரப்பு அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் 2008ஆம் ஆண்டு அறிமுகமானவர் முரளி விஜய். வலது கை பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த இவர், அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்தியாவுக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் முரளி விஜய் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தனது மிகச் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய முரளி விஜய், 2014இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது வலிமையான பந்துவீச்சுக்கு இடையே 1000 பந்துகளை எதிர்கொண்டார். 2018இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியே முரளி விஜய்க்கு கடைசி போட்டியாக அமைந்தது. அதன் பின் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், அவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரிக்கெட் சார்ந்து உள்ள தொழில்களில் உள்ள வாய்ப்புகளை கண்டறியபோகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் முரளி விஜய், பிசிசிஐ நம்பி சோர்ந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும், வெளிநாடுகளில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் முரளி விஜய் ஓய்வை அறிவித்துள்ளார்.

Chella

Next Post

போக்சோவில் கைதான 33 வயது பெண்மணி.! 17 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்.!

Mon Jan 30 , 2023
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 17 வயது மாணவனை கூட்டிக் கொண்டு ஓடிய 33 வயது இளம் பெண்ணை காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மகாலட்சுமி(33). இவர் அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். சம்பவ தினத்தன்று வேலைக்குச் சென்ற மகாலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த கணவர் கார்த்திக் தாட்கோ நகர் […]

You May Like