fbpx

வேறு சாதி இளைஞரை காதலித்து திருமணம்..!! அக்கா மீது காரை ஏற்றியும், கழுத்தை அறுத்தும் கொன்ற தம்பி..!!

தெலங்கானா மாநிலம் ராயபோலு என்ற கிராமத்தில் நாகமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர், கடந்த 2020 முதல் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர், தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், தனது தம்பியான பரமேசுடன் வசித்து வந்தார்.

இதில் நாகமணிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கணவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்தார். பிறகு தனது ஊரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவர் வேறு சாதியை சேர்ந்தவர். இதன் காரணமாக தனது அக்காவின் காதலுக்கு பரமேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால், எதிர்ப்பையும் மீறி நாகமணி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, கணவன் – மனைவி இருவரும் ஹைதராபாத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இதற்கிடையே, டிசம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன்னுடைய சொந்த ஊருக்கு கணவருடன் சென்ற நாகமணி, பின்னர் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் கிளம்பினார். தனது மாமியார் வீட்டில் இருந்து பைக்கில் சென்ற நாகமணியை அவருடைய தம்பி பரமேஷ் காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது, அக்காவின் பைக் மீது காரை கொண்டு பரமேஷ் மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர், காரில் இருந்து கீழே இறங்கி வந்த ‌அவர், கத்தியால் அக்காவை குத்திக்கொலை செய்தார். பின்னர், அவரே காவல் நிலையத்தில் சரணடைந்தார். சொந்த அக்காவையே தம்பி கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தம்பதி பரமேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ஃபெஞ்சல் புயல்..!! வாய்ப்பை தவறவிட்ட விஜய்..!! எல்லாம் பேச்சு மட்டும் தானா..? திமுக, அதிமுக வளர இதுதான் காரணம்..!!

English Summary

The incident of a younger brother slitting his own sister’s throat and killing her has caused great shock.

Chella

Next Post

”என்கூட எல்லாம் பண்ணிட்டு வேற ஒரு பொண்ணுக்கூட எப்படி”..? 2 முறை அபார்ஷன்..!! கதிகலங்கி போன கல்யாண மண்டபம்..!!

Tue Dec 3 , 2024
The two had settled down in Tambaram's Selaiyur and were raising a family as husband and wife. Priyadarshini also said that they had two miscarriages during that time.

You May Like