ராணிப்பேட்டை அடுத்த எம்ரால்டு நகர் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் பலி.
மேல்மருத்துவரில் சாமி தரிசனம் செய்துவிட்டு கர்நாடக நோக்கி சென்றுள்ள பேருந்தின் மீது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காய்கறி ஏற்றி வந்த லாரி, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்ட போலீசார், உடனடியாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.