fbpx

புயலில் அடித்துச் செல்லப்பட்ட கார்..!! ஆட்டோவில் வந்த கூல் சுரேஷுக்கு கார் பரிசு..!! இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..!!

ஆட்டோவில் வந்த கூல் சுரேஷுக்கு தன்னிடம் இருந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த கூல் சுரேஷை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது சோசியல் மீடியா தான். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்துக்காக இவர் செய்த வித்தியாசமான புரமோஷன் தான் அவரை மேலும் பிரபலமாக்கியது. பின்னர் சோசியல் மீடியாவில் பாப்புலரான கூல் சுரேஷுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் ஆளே டோட்டலாக மாறிய அவர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், கூல் சுரேஷுக்கு பிரபலம் ஒருவர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வகையில், கடந்தாண்டு சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. அந்த சமயத்தில் கூல் சுரேஷின் காரும் அதில் சிக்கி சேதமானதாம். அந்த சமயத்தில் கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால் அவரால் காரை காப்பாற்ற முடியாமல் போனதாம்.

பின்னர் கார் இல்லாமல் எங்கு சென்றாலும் ஆட்டோவையே பயன்படுத்தி வந்தாராம் கூல் சுரேஷ். இந்த தகவல் அறிந்த சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடை உரிமையாளர் தமிழ்செல்வன் கூல் சுரேஷை நேரில் பார்க்க அழைத்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த கூல் சுரேஷுக்கு தன்னிடம் இருந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி அவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார். அந்த கார் சாவியை கையில் வாங்கியதும் தமிழ்ச்செல்வனுக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் தன் ஸ்டைலில் நன்றிகளை தெரிவித்தார் கூல் சுரேஷ்.

Read More : பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி..!! எங்கு தெரியுமா..?

English Summary

Tamilchelvan, the owner of Salem RR Biryani, gifted cool Suresh, who arrived in an auto, his own car.

Chella

Next Post

ALL EYES ON RAFAH : இஸ்ரேலுக்கு எதிராக சமூக வலை தளங்களில் ட்ரெண்ட் செய்யப்படும் "ஆல் ஐஸ் ஆன் ரஃபா" ஹேஷ்டேக்!!

Wed May 29 , 2024
அகதிகள் முகாமின் புகைப்படம் “All Eyes on Rafah” என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், ஒரு அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்கள் “All Eyes on Rafah” என்ற வாசகத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காசா – இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே […]

You May Like