fbpx

மாணவனுக்கு விஷம் கொடுத்த வழக்கு..! மளிகைக் கடை அண்ணாச்சியால் வசமாக சிக்கிய மாணவியின் தாய்..!

காரைக்காலில் மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்த மாணவனை, சக மாணவியின் தாயாரே விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்தது எப்படி என்பது போலீஸ் விசாரணையில் முழுமையாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவனை கொலை செய்ததாக மாணவியின் தாயார் சகாயராணி கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாகாயராணியை போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. சிறுவனுக்கு குளிர் பணத்தில் கலந்து கொடுத்தது பேதிமருந்து என்றும், மாதா கோயில் வீதியிலுள்ள ஒரு நாட்டு மருந்துக் கடையில் இம்மருந்தை வாங்கியதாகவும் சகாயராணி தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் சிறுவன் பேதி மருந்தால் உயிரிழக்கவில்லை என்றும், குளிர்பானத்தில் விஷம் கலந்து தரப்பட்டதால் தான் உயிரிழந்தார் என்றும் உறுதியாக தெரிவித்தனர்.

மாணவனுக்கு விஷம் கொடுத்த வழக்கு..! மளிகைக் கடை அண்ணாச்சியால் வசமாக சிக்கிய மாணவியின் தாய்..!

இந்நிலையில், காரைக்கால் காமராஜர் சாலையில் இதயம் என்ற பெயரில் மளிகை கடை வைத்திருக்கும் சாதிக் என்பவர் தாமாக முன்வந்து போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். சகாயராணி கடந்த 2ஆம் தேதி எனது கடைக்கு வந்து எலிபேஸ்ட் வாங்கியதாகவும், அதை குழந்தைகள் சாப்பிட்டால் என்னவாகும் என்று கேட்டுச் சென்றதாகவும் கூறினார். மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது பேரன் உயிரிழந்து விட்டதால் சென்னை சென்று விட்டேன். கடந்த 10ஆம் தேதி வீட்டிற்கு வந்த பின்னரே மாணவன் கொலை செய்யப்பட்ட விவரம் அறிந்து தாமே முன்வந்து வாக்குமூலம் அளிக்க வந்ததாகவும் சாதிக் கூறியுள்ளார்.

மாணவனுக்கு விஷம் கொடுத்த வழக்கு..! மளிகைக் கடை அண்ணாச்சியால் வசமாக சிக்கிய மாணவியின் தாய்..!

சகாய ராணியின் வாக்குமூலத்தால் குழப்பத்தில் இருந்த போலீசார், மளிகை கடைக்காரர் சாதிக் கொடுத்த தகவல்களால் தெளிவுப்பெற்றனர். மேலும், சாதிக்கின் பக்கத்து கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் சகாயராணி பைக்கில் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும், சாதிக் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து சகாயராணியிடம் போலீசார் ஆதாரங்களை காட்டி விசாரணை நடத்தினர். வசமாக சிக்கியதை தெரிந்து கொண்ட சகாயராணி, எலி பேஸ்ட் வாங்கி கலந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார். அதை வாக்குமூலமாகவும் கொடுத்தார். இந்த ஆதாரம் ஒன்றுதான் இவ்வழக்கினை போக்கே மாற்றி விட்டதாகவும், இல்லையெனில் இவ்வழக்கில் குற்றத்தை நிரூபிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Chella

Next Post

ஷாக் நியூஸ்.. மேலும் சில ஆவின் பொருட்களின் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

Fri Sep 16 , 2022
ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி இந்த உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.. அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டது.. இதே போல் 200 […]

You May Like